குடிபோதையில் தவறி விழுந்து வாலிபர் பலி
மல்லசமுத்திரத்தில் குடிபோதையில் தவறிகீழே விழுந்தவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;
Update: 2023-12-30 13:02 GMT
மதுபோதையில் தவறி விழுந்து பலி
மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டியை சேர்ந்தவர் சென்னகேசவன் மகன் ருக்மநாதன்35. கேபிள் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மேனகா34 என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. தற்சமயம், சூரியகவுண்டம்பாளையத்தில் அவரது மாமனார் வீடு அருகில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு, மல்லசமுத்திரம் பொன்னியாறு பாலம் அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் மல்லசமுத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்ததின்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.