தெடாவூரில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி !
தெடாவூரில் லாரி சக்கரத்தில் சிக்கிய வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-04 05:30 GMT
விபத்து
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வீரகனூர் அருகே, பகடப்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னராசு மகன் கிருஷ்ணமூர்த்தி (22). இவர் ஆத்தூரில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் பணி முடிந்து, பகடப்பாடிக்கு டூவீலரில் சென்றுள்ளார். தெடாவூர் தனியார் மில் அருகில் சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த சுகுமார் (57) என்பவரின் டூவீலர் மீது மோதி, சக்கரை தனியார் ஆலையில் இருந்து லோடு ஏற்றிவந்த லாரி பின் சக்கரத் தில் மாட்டி தலை நசுங்கி கிருஷ்ண மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டூவீலரில் சென்ற சுகுமார் காயமடைந்து, ஆத்தூர் அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து எஸ்ஐ செந்தில் குமரன், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு கிருஷ்ணமூர்த்தி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.