ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

சங்ககிரி அருகே நண்பர்களோடு காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-12 16:18 GMT

ஆற்றில் மூழ்கி பலி 

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் கோரணம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் செல்லப்பன் மகன் எம். இ பட்டதாரி இளைஞர் தினேஷ் (25) தனது நண்பர்களான ஹரி பிரசாத் (23) மாதவன் (20) ஆகியோர்களுடன் சங்ககிரியை அடுத்த கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு சென்று குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தினேஷ் நீரில் மூழ்கி மாயமானார்.

இது குறித்து தினேஷின் நண்பர்கள் மாதவனும், ஹரி பிரசாத்தும் தினேஷ் நீரில் மூழ்கிவிட்டதாக கூறியதையடுத்து தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்ககிரி தீயணைப்பு துறை வீரர்கள் உதவி உடன் பரிசல் மூலம் மாயமான தினேஷை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தேடி சடலமாக மீட்டெடுத்தனர்.

மேலும் சடலத்தை பிரயோத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர்.வழக்கு பதிவு செய்து தேவூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

Tags:    

Similar News