ஏரியில் பிணமாக மிதந்த வாலிபர் - போலீசார் விசாரணை

வேப்பந்தட்டை அருகே ஏரியில் சடலமாக மிதந்த வாலிபரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-18 04:55 GMT

பைல் படம் 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூரை சேர்ந்த மாணிக்கத்தின் மகன் முருகன் (வயது 35). இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள ஏரிக்கு மீன் பிடிப்பதற்காக சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர். அப்போது ஏரியில் முருகன் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரது உறவினர்கள் முருகனின் உடலை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் முருகனின் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News