கள்ளக்குறிச்சியில் தேய்பிறை அஷ்டமி பூஜை !
கள்ளக்குறிச்சியில் கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-03 05:54 GMT
பூஜை
கள்ளக்குறிச்சியில் கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், தனது வாகனத்துடன் எழுந்தருளியுள்ள கால பைரவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.