வீரமலை அருகே கோவில் காளை உயிருடன் மீட்பு
வீரமலை மேச்சலுக்குச் சென்ற கோவில் காளை கிணற்றில் விழுந்த நிலையில் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மீட்கபட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வீரமலை ஊராட்சி மல்லிகல் கிராமத்தில் பெருமாள் கோவிலுக்கு நேந்து விடப்பட்ட கோவில் காளை கடந்த ஐந்தாண்டுகளாக கிராமத்தில் செல்ல பிள்ளையாக வளம் வந்தது இந்நிலையில் கிராம மக்கள் கொடுக்கும் உணவு பழங்கள் மற்றும் அங்கு விளையும் விளைநிலங்களில் உள்ள விவசாய பயர்களை தின்று ஊரில் உள்ள குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும்,
செல்ல பிள்ளையாக கோவில் காளை வலம் வந்து கிடந்தது. இந்நிலையில் இன்று காலை சிவமூர்த்தி என்பவரது விவசாய நிலத்தில் கோவில் காலை மேய்ந்து கொண்டிருந்த பொழுது திடீரென முட்பதற்குச் சென்றது அப்பொழுது முட்புதரில் மண்டி கிடந்த,
இருந்த பள்ளத்தில் தவறி கீழே விழுந்தது அதில் 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தண்ணீர் இருந்த நிலையில் கீழே விழுந்த கோவில் காளை கத்தியுள்ளது இந்த அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் தண்ணீரில் கோவில் காலை போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போச்சம்பள்ளி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பெயரில் விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் கீழே இறங்கி கயிறு மூலம் கட்டி கோவில் காளையை உயிருடன்,
சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர் கோவில் காளை ஊரில் செல்லமாக வளம் வந்து வளர்ந்து வந்த நிலையில் திடீரென கிணற்றில் விழுந்த சம்பவம் கிராம மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.