வில்லுக்குறியில் ஜல்லி கடத்திய டெம்போ, பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

வில்லுக்குறியில் ஜல்லி கடத்திய டெம்போ, பொக்லைன் இயந்திரம் பறிமுதல். 3 பேர் கைது.

Update: 2024-07-04 05:37 GMT
கைது 
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல்  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கனிம வளங்கள் கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று இரணியல் போலீசார் வில்லுக்குறி  அருகே உள்ள மாம்பழத்துறையாறு அணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.      அப்போது அங்கு கொத்துபாறை தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் வழியாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் அந்த வாகனத்தில் ஒரு யூனிட் ஜல்லி எந்தவித உரிமமும் இல்லாமல் எடுத்துவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.       இதையடுத்து ஜல்லியை ஏற்றி வந்த ஜேசிபி டெம்போ உள்ளிட்ட வகைளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜேசிபி டிரைவர் சுரேஷ் (41), கிரஷர் மேலாளர் வேணு ( 55) டெம்போ டிரைவர் ரஜினால்டு (37) ஆகிய 3 பேரையும் கைது செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News