கடலரிப்பால் சேதமான சாலை  தற்காலிக சீரமைப்பு - எம்எல்எ துவக்கி வைத்தார்

மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது;

Update: 2023-12-09 07:18 GMT
சாலை சீரமைப்பு பணி துவங்க நிகழ்ச்சி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம்  மீன்பிடி துறை முகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளான அரயன்தோப்பு, முள்ளுர் துறை, ராமன்துறை, இனயம் வழியாக குறும்பனை வரையிலான ஏராளம்  மீனவர் கிராமங்களை இணைக்கும் சாலை இந்த  கடற்கரை கிராமங்கள் வழியாக செல்கிறது. மீனவர்கள் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்துக்கு செல்ல இது முக்கிய சாலையாகும்.   இந்த சாலையில் தேங்காபட்டணம்  அரயந்தோப்பு முதல் முள்ளூர்துறை பகுதி வரையிலான சுமார் 700 மீட்டர் தூரத்தில் சுமார் 25 ஆண்டுகளாக கடலரிப்பால் சாலை சேதமடைந்து காணப்படுகிறது.         

Advertisement

இந்த சாலையை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் விடுத்த கோரிக்கை தமிழக சட்டமன்றம் வரை எதிரொலித்தது. இதையடுத்து தற்போது முதற்கட்டமாக தற்காலிகமாக தார் தளம் அமைத்து சாலை சீரமைக்க 32 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான வேலை துவக்க நிகழ்ச்சி நேற்று முள்ளுர்துறையில் நடைபெற்றது. ராஜேகுமார் எம் எல் எ துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கு பணியாளர் இளங்கோ பிரார்த்தனை செய்தார். தமிழக மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News