தென்காசி : சிவன் கோவில்களில் சிவராத்திரி திருவிழா
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் நடந்த சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-03-10 08:46 GMT
சிவராத்திரி விழா
தென்காசி மாவட்டம் தென்காசியில் மாசி மகா சிவராத்திரி திருவிழா சிவாலயங்களில் சிறப்பாக மகிழ்ச்சி நடைபெற்றது. இந்த சிவாலயங்களில் நேற்று இரவு முதல் ஐந்து கால பூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மகா சிவராத்திரி முன்னிட்டு தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் சுவாமி சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. கோவிலில் தரிசனம் செய்வதற்காக பல ஆயிரக்கனக்கான பக்தர்கள் வழிபாடுகள் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.