ஆத்தூர் : மஞ்சள் ஏலம் !
ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண்மை விற்பனை கூட்டுறவு சங்கத்தில் 873 விவசாயிகள் கொண்டு வந்த 4,528 மஞ்சள் மூட்டைகள் ரூ.4.61 கோடிக்கு விற்பனை ஆனது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-06 06:23 GMT
termeric
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், கல்லா நத்தம், கெங்கவல்லி, தலைவாசல், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 873 விவசாயிகள் 4,528 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 17 வியாபாரிகள் மஞ்சளில் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். இதில் விராலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 16,389 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 20,889 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் 14,589ரூபாய்க்கும் அதிகபட்சமாக 16,512 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 28,389 அதி பட்சமாக 34, 199 ரூபாய் விலை போனது. 4528 மஞ்சள் மூட்டைகள் மூலம் 4 கோடியே 61 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.