உலக சர்க்கரை நோய் தின பரிசோதனை முகாம்
உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி பரிசோதனை முகாம்;
By : King 24x7 Website
Update: 2023-12-08 04:43 GMT
உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி பரிசோதனை முகாம்
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு சேலம் எம்.ஜி. சர்க்கரை நோய் மருத்துவமனை மற்றும் டயாபடீஸ் இந்தியா இணைந்து இலவச சர்க்கரை நோய் பரிசோதனை, விழிப்புணர்வு முகாமை சேலத்தில் நடத்தியது. முகாமை இந்திய மருத்துவ சங்க சேலம் கிளை தலைவர் பழனியப்பன் தொடங்கி வைத்தார். இதில், டாக்டர் எம்.ஜி. யுவராஜ் சர்க்கரை நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ததுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும், அவர் ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி, நல்ல தூக்கம், சரியான மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோயின் சிக்கல்களை தவிர்க்கலாம் என்றார்.