தைலியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
சங்ககிரி அரசிராமணி தைரலியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் அரசிராமணி பேரூராட்சி செட்டிப்பட்டி தைலாங்காடு பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ தைலியம்மன், ஸ்ரீ வைத்தீஸ்வரன், ஸ்ரீ காத்தவராயன் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பம்பை மேல தாளங்கள் முழங்க தீர்த்தம் எடுத்துக் கொண்டு முக்கிய கிராமங்களின் வழியாக தைலியம்மன் கோயிலை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்று யாகசாலையில் வைக்கப்பட்ட பூரண கும்பத்தை சிவாச்சாரியார்கள் எடுத்துக்கொண்டு கோயிலை சுற்றி வந்து அருள்மிகு ஶ்ரீ தைலியம்மன் ஸ்ரீ வைத்தீஸ்வரன் காத்தவராயன் கோயில் கோபுர கலசத்திற்கு புண்ணிய தீர்த்தம் ஊற்றி தீபாரதனை காமிக்கப்பட்டு பக்தர்களுக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.