வரும் 21ல் கந்தசுவாமி கோவிலில் தைப்பூச கொடியேற்றம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் வரும் 21ல் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
Update: 2024-01-18 12:55 GMT
மல்லசமுத்திரம் அருகேயுள்ள, பிரசித்திபெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் வருடாவருடம் தைபூசத்தன்று தேர்திருவிழா வெகுவிமர்சையாக நடக்கும். அதன்படி, இந்தவருடன் வருகிற 21ம்தேதி மாலை 6மணிக்கு, கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. 22,23தேதிகளில் பகல் 1மணிக்கு, சிறப்பு அபிசேகள் நடைபெறும். 24ம்தேதி, இரவு 7.30க்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். 25ம்தேதி, தைபூசத்தன்று, மதியம் 3.15மணிக்கு, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவிஆணையர் சுவாமிநாதன் முன்னிலையில், திருத்தேர் வடம்பிடித்து கோவிலை சுற்றி வலம்வரும். தொடர்ந்து, 26ல் சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். 27 ம்தேதி இரவு 1மணிக்கு, சத்தாபரண மகாமேரு நடைபெறும். 28 ம்தேதி வசந்தவிழாவுடன் திருவிழா முடிவடையும். ஏற்பாடுகளை, செயல்அலுவலர் மணிகண்டன், பரம்பரை அறங்காவலர் சந்திரலேகா செய்துள்ளனர்.