திருச்செங்கோட்டில் தைப்பூசத் தேரோட்டம்

திருச்செங்கோட்டில் 50 ஆண்டு களுக்கு பின் நடந்த தைப்பூசத் தேரோட்டம் 2 வது ஆண்டாக வெகு விமர்சையாக நடந்தது.

Update: 2024-01-25 12:06 GMT

தேரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

ஆண்டுதோறும் தை மாதம் முருகப் பெருமானின் பிறந்த நாள் என கருதப் படும் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இதனை ஒட்டி முருகன் கோவில் உள்ள பகுதிகளில் தைப்பூச தேரோட்டம் நடைபெறும்.அதன்படிதிருச்செங்கோடு கைலாசநாதர் ஆறுமுகசாமி தைப்பூச தேர் திருவிழா நடைபெற்றது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் ஏதோ காரணங்களால் தைப்பூச தேரோட்டம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு 50 ஆண்டுகளுக்கு பின் தைப்பூச தேரோட்டம் திருவிழா நடைபெற்றது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் தைப்பூச தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஆறுமுகசாமி கோவிலில் இருந்து வள்ளி தெய்வானை சமேத முருகன் விநாயகருடன் கைலாசநாதர் கோவிலுக்கு எழுந்தருளி கைலாசநாதர், சுகந்த குந்தலாம்பிகை சோமஸ்கந்தர், சண்டிகேஸ்வரர்,

சூலத்தேவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் அங்கிருந்துபுறப்பட்டு திருத்தேருக்கு வந்து சேர்ந்தார். முதலில் வள்ளி தெய்வானை சமேத முருகன், கணபதி தேரோட்டம் நடைபெற்றது. தேரை நாமக்கல் மேற்கு மாவட்டதிமுக செயலாளர்,

மண்டல நகரமைப்பு திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில்,மாநில திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன்,அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, மாவட்ட வருவாய் அலுவலர்சுமன் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி தாசில்தார் விஜயகாந்த்அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்களின் செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் ரமணி காந்தன்,ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் அட்மா தலைவர் வட்டூர் தங்கவேல்,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர்சுரேஷ்பாபு நகர திமுக செயலாளர் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன்,

ஒன்றிய குழு உறுப்பினர் திருநங்கை ரியா, மற்றும் அறங் காவலர் குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், அருணாசங்கர், அர்ஜுனன், பிரபாகரன், நகர மன்ற உறுப்பினர்கள் ஊர் பிரமுகர் ராஜகணபதி, ஊர் கவுண்டர் ராஜா,நாமக்கல் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் செயலாளர் செல்வகுமார்,

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் மயில்சாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் நந்தகுமார் ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர் முன்னதாக செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சார்பில் காவடி எடுத்து நான்கு ரத வீதிகளையும் வலம் வந்தனர்.

தேருக்கு முன்பாக பூங்கரகம் மற்றும் காவடி ஆட்டம் நடைபெற்றது. சிறுவர் சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் தேருக்கு முன் தாளத்துக்கு ஏற்றபடி நடனமாடியபடி வந்தனர். திருவிழாவை ஒட்டி ஆங்காங்கே அன்னதானம் செய்யப்பட்டது. நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த திருத்தேர் நிலை சேர்ந்தது. மாலை கைலாசநாதர் சுகந்த குந்லாம்பிகை சோமஸ்கந்தர்,

சண்டிகேஸ்வரர், சூலத் தேவர், தேர் வடம் பிடிக்கப்பட உள்ளது.வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.தைப்பூச திருவிழாவை ஒட்டி ஆறுமுகசாமிக்கு பல்வேறு மண்டபக் கட்டளைகாரர்கள் சார்பில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது மாலை கைலாசநாதர் கோவிலில் ஆறுமுகசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News