தாளவாடி : சூறைக்காற்றுடன் பெய்த மழை - 300 வாழை மரங்கள் முறிந்து சேதம்

தாளவாடி அருகே சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 300 வாழை மரங்கள் முறிந்து சேதமானது.

Update: 2024-05-03 04:20 GMT
தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது கடும் வெயில் வாட்டி வருகிறது இதனால் வனப்பகுதி முழுவதும் காய்ந்து கிடக்கிறது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாய பணிகளுக்கும் பாதிக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் தாளவாடி அடுத்த எரகனள்ளி நெய்தாளபுரம் கல்மண்டிபுரம் ஜீர்கள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பத்து நிமிடம் மிதமான மழை பெய்தது இந்த சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் எரகனள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 300 வாழை மரங்கள் முறிந்து நாசமாகின இதேபோல் கல்மண்டிபுரம் கிராமத்தில் 2 தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன அறுவடைக்கு சில நாட்களில் இருந்த நிலையில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் கிருஷ்ணனுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News