குறைதீர் கூட்டம், சிறப்பு முகாம்கள் ஒத்தி வைப்பு
தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடக்க இருந்த குறைதீர் கூட்டம், சிறப்பு முகாம்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.
Update: 2024-03-18 01:17 GMT
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிரதிவாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்களும் கிராமப் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.