தஞ்சாவூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம்

தஞ்சை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-03-23 09:13 GMT

தஞ்சை தொகுதி நாதக வேட்பாளர்

தஞ்சை லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அன்னை கல்விக்குழும தலைவர் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். 56 வயதான இவர் இளங்கலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். தந்தை முகம்மது இப்ராஹிம், தாய் பாத்திமாபீவி, மனைவி ஆயிஷா பீவி. இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். கல்லூரி பருவத்தில் மாணவர் தலைவராக இருந்துள்ளார். சவுதி ரியாத்தில் தமிழ் சங்க நிர்வாகத் தலைவர். 2016 சட்டசபை தேர்தலில் பாபநாசம் தொகுதியிலும், 2021 சட்டசபை தொகுதியில் அறந்தாங்கி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இவர் தஞ்சை அருளானந்த நகர் 8வது குறுக்குத் தெருவில் வசித்து வருகிறார்.

Tags:    

Similar News