தஞ்சாவூர் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம்

தஞ்சாவூரில் டெல்லி விவசாயிகள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

Update: 2024-02-23 12:02 GMT
விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், இளம் விவசாயி சுப்கரன்சிங் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயம் அடைந்த நிலையில், விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே, கருப்பு கொடியுடன் விவசாயிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சோ.பாஸ்கர், பி.செந்தில்குமார், ஆர்.ராமச்சந்திரன்,  திருநாவுக்கரசு, கோவிந்தராஜ், தேவா, மா.ரவிச்சந்திரன், முகமது இப்ராஹிம், ரமேஷ், அறிவழகன், தொழிற்சங்கத் தலைவர்கள் கு.சேவியர் (தொமுச), சி.ஜெயபால் (சிஐடியு), தில்லைவனம் (ஏஐடியுசி), கே.ராஜன் (ஏஐசிசிடியு), மோகன்ராஜ் (ஐஎன்டியுசி) முன்னிலை வகித்தனர்.  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி,  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.வாசு, அனைத்திந்திய ஜனநாயக மாத சங்க மாநில குழு உறுப்பினர் எஸ்.தமிழ் செல்வி விவசாய சங்க நிர்வாகிகள் பழ.ராஜேந்திரன் எம்.பழனி அய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
Tags:    

Similar News