தஞ்சாவூர் : ஆடுகளுக்கு ஆட்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுகளுக்கு ஆட்கொல்லி நோய் தடுப்பூசி முகாமை மண்டல இணை இயக்குனர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

Update: 2024-05-02 05:32 GMT

தடுப்பூசி முகாம்

தஞ்சாவூர் மண்டல கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆடுகளுக்கு ஆட்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது. தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை கால் நடை மருந்தகத்துக்குட்பட்ட மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில் நடந்த தடுப்பூசி முகாமை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த நோய் கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த தடுப்பூசி முகாம் 30 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து செம்மறி மற்றும் வெள்ளாடுகளுக்கும் இந்த தடுப்பூசிகள் போடப்படுகிறது என்றார். இதில் கால் நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள் சரவணன், தெய்வஅமிர்தம், நோய்புலனாய்வு பிரிவு, கால்நடை டாக்டர்கள் கோகுல், செரீப் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் நாஞ்சிக் கோட்டை கால்நடை மருந்தகத்துக்குட்பட்ட நா.வல்லுண்டாம்பட்டு, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லாங்கரை, விளார், நாஞ்சிக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. மாப்பிள்ளைநாயக்கன்பட்டியில் நடந்த முகாமில் 300க்கும் மேற் பட்ட ஆடுகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட் டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News