வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் வாகனத்தை திருப்பி அனுப்பிய பொதுமக்கள்.....
வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் வாகனத்தை ஊருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பிய பொதுமக்கள். பின்னோக்கி சென்று வாகனம் திரும்பி சென்றது.
வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் வாகனத்தை ஊருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பிய பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கொண்டம்பட்டி கிராம பகுதியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஜெயப்பிரகாஷ் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் கொண்டம்பட்டி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது வாகனத்தை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் இதில் பகுதி மக்கள் கூறியதாவது ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உருவாக்கி 13 ஆண்டுகள் ஆன நிலையில் தொடர்ச்சியாக 3 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று வரும் சூழ்நிலையில் தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக தமிழ்செல்வம் பதவி வகித்து வருகிறார்.
சட்டமன்ற உறுப்பினர் உடன் வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிக்க கிராமத்திற்குள் சென்றனர் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதில் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வம் மூன்று ஆண்டுகளாகவே எங்கள் கிராமப் பகுதிகளுக்குள் வருவதில்லை எனவும் அடிப்படை தேவைகளை கூட சீர் செய்ய வந்ததில்லையெனவும் தற்பொழுது ஓட்டு கேட்க மட்டும் வந்து விட்டீர்களா என கூறி எங்களது கிராம மக்களின் ஓட்டு உங்களுக்கு யாரும் அளிக்க மாட்டோம் என கூறி வெளியேறுங்கள் என பொதுமக்கள் ஒன்று கூடி விரட்டினர் வாக்கு சேகரிக்க வந்த வாகனம் அவசர கதியில் பின்னோக்கி சென்று வாகனம் திரும்பி சென்றது.
இந்த நிகழ்வு அதிமுக கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர் அசோக்குமார் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி எம் தமிழ்செல்வம் முன்னாள் பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.