கண்ணாடி அறையில் எழுந்தருளிய அழகிய சிங்கபெருமாள்
108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவேளுக்கை அழகிய சிங்கபெருமாள் கோவிலில் அமிர்தவள்ளி தாயார், ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளினார்.;
Update: 2024-02-04 03:44 GMT
அழகிய சிங்கபெருமாள் , அமிர்தவள்ளி தாயார், ஸ்ரீதேவி, பூதேவி
காஞ்சிபுரத்தில், 108 திவ்யதேசங்களில் ஒன்றான அமிர்தவல்லி தாயார் சமேத திருவேளுக்கை அழகிய சிங்கபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் தை மாத ஸ்வாதி நட்சத்திரம் மற்றும் வெள்ளிக் கிழமையான நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, அமிர்தவள்ளி தாயார், ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளினார். மேலும், பெரியாழ்வாரின் திருநட்சத்திரம் சுவாதி என்பதால், பெரியாழ்வாருக்கு சிறப்பு மரியாதை நடந்தது. தொடர்ந்து, பெரியாழ்வார் பாசுரங்கள் சேவித்து, பெருமாளுடைய சடாரி மரியாதை, பிரசாத நைவேத்யம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வரும், மாசி மாதம் சுவாதி திருநட்சத்திர தினத்தன்று, தவன உற்சவம் நடைபெறுகிறது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.