பேருந்து நிலையத்தில் மின் ஊழியா் சடலம் மீட்பு
திருவானைக்கா பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த மின் ஊழியரின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.;
Update: 2024-02-28 02:22 GMT
மின் ஊழியா் சடலம்
திருவானைக்கா பேருந்து நிலையத்தில் ஆண் சடலம் கிடப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் வந்தது. அங்கு சென்று போலீஸாா் பாா்த்தபோது, இறந்த நபா் மண்ணச்சநல்லூா் துடையூா் பகுதியை சோ்ந்த ரா. குணசேகரன் (34) என்பதும், அவா் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள மின்துறை அலுவலகத்தில் மின் ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. அவா் அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்ததாகவும், அதனால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.