குமரி : மாட்டுவண்டியில் பயணம் செய்த மணமக்கள் !

சுற்றுச் சூழலை பாதுகாக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நம் முன்னோர்கள் பயணம் செய்த மாட்டுவண்டியில் மணமக்களை அனுப்பி வைத்தோம் என்றனர்.

Update: 2024-04-22 07:18 GMT

மாட்டுவண்டி

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் முருகேசன் மற்றும் மண்டைக்காடு பேரூராட்சி முன்னாள் தலைவர் மகேஸ்வரி முருகேசன் தம்பதியரின் மகள் டாக்டர் ஹரிஷ்மா தேவிக்கும், அம்மாண்டி விளை பகுதி இன்ஜினியர் அருண் பிரகாஷ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.மண நிகழ்ச்சிக்கு முடிந்த பின்னர் மணமகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் மணமக்களை மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பெற்றோர் மணமக்களை மாட்டுவண்டியில் மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மணமக்கள் மாட்டுவண்டியில் செல்வதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். இது குறித்து மணமக்களின் குடும்பத்தார் கூறுகையில்,-  வாகனங்கள் வருகைக்கு முன்பு நமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை தற்போதைய  சந்ததியினருக்கு தெரிவதில்லை. எனவே சுற்றுச் சூழலை பாதுகாக்க பொதுமக்கள் மத்தியில்  விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,  நம் முன்னோர்கள் பயணம் செய்த மாட்டுவண்டியில் மணமக்களை  அனுப்பி வைத்தோம் என்றனர்.
Tags:    

Similar News