திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்.

Update: 2024-02-28 14:02 GMT

திருப்பூர் மாநகராட்சி வரவு செலவு திட்டம் 2024 மற்றும் 2025 காண திட்ட அறிக்கைகள் வெளியிடப்பட்டது.

அதில், ”திருப்பூர் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 15.62 கோடி மதிப்பீட்டில் 2023- 2024 ஆண்டில் 84 பணிகள் நடைபெற்றுள்ளது. திருப்பூரில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவமனை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 90 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 9.33 கோடி ரூபாய் பொதுமக்களின் பங்களிப்புடன் மாநில அரசின் 18.67 கோடி ரூபாய் பங்களிப்புடன் புதிதாக மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் அம்ருத் திட்டத்தின் திட்டத்தில் குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணி 1120.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு 100% முடிவடைந்தது இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வைக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை நேரம் செய்யப்பட்டு வருகிறது.    அம்ருத் திட்டத்தில் முதல்கட்ட பாதாள சாக்கடை திட்டப் பணியில் 636.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 95 % பணிகள் முடிவடைந்துள்ளது.

மேலும் இரண்டாம் கட்ட திட்ட பணிகள் வார்டு எண் 45, 46, 48, 49, 55 ,56, 59 ஆகிய பகுதிகளில் 188.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள நிர்வாகம் அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை மூலமாக நேரடியாக குப்பைகளை விஞ்ஞான பூர்வமாக உரமாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாநகரில் சுகாதாரம் பேணி காத்து சுற்றுச்சூழல்  மேம்படுத்தும் வகையில் 200 டன் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகரில் தெருவிளக்கு 17.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8681 புதிய தெரு மின்விளக்குகளும் 4755 சோடியம் ஆவி விளக்குகளை மின் சிக்கன விளக்குகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 13436 எல்.இ.டி தெரு மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 உயர்மின் கோபுர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.   மாநகரில் குறிப்பாக நீர்நிலைகள் வசிக்கும் நகர்ப்புற அடித்தட்டு மக்கள் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் வகையில் அரசு சார்பு நிறுவனமான நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் ஒத்துழைப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.   திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் தன்னார்வலர்களின் உதவியுடன் 32 கூடுதல் வகுப்பறைகள், 22 ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் 56 கழிப்பறைகள் புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக 24 மாநகராட்சி பள்ளிகளில் 62 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் 46 பள்ளிகளில் 3.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இடுவாய் கிராமத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான ஐந்து புள்ளி ஐந்து ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியார் கூட்டு ஒப்பந்த முறையில் அருகில் போங்க அமைக்கப்பட்டு தமிழக முதலமைச்சரால் திறந்தவைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியின் நொய்யல் ஆற்றின் கரையில் 17.94 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூர் நொய்யல் நதிக்கரை ஓரம் இருபுறமும் 6.70 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 5. கி. மீ நீளத்திற்கு தார் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு வளர்ச்சிப் பணிகளால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் 259.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நிதி பெறப்பட்டு சாலைகள் புறனமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 63.52 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கும் பணிக்கான ஒப்பந்தங்கள் கூறப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்குள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் முதற்கட்டமாக 38.22 கோடி திட்ட மதிப்பீட்டில் 8 மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கழிவுநீர் கால்வாய்களில் தேங்கும் வண்டல் மண்ணை அகற்றுவதற்காக முதன்முறையாக மறுசுழற்சி இயந்திரம் 11.000 லிட்டர் கொள்ளளவில் இரண்டு இயந்திரங்களும், 7000 லிட்டர் கொள்ளளவில் ஒரு இயந்திரமும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் அச்சுறுத்தலாக சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த 3 இடங்களில் அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்பட்டு, கருத்தடை செய்யப்பட்டு, தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கோவில் வழியில் நிரந்தரம் பேருந்து நிலையம் 26 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில்  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். திருப்பூர் மாநகரில் உள்ள மூளிக்குளம் மற்றும் சின்னாண்டிபாளையம் குளங்களுக்கு 105 லட்சம் ரூபாயில் நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி தூர்வாரி நீராதாரத்தை வளப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாநகராட்சி ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் 200 மாடி வீடுகளில் மாடி தோட்டம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நடவடிக்கைகளை குறைக்கும் விதமாக நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க 64.20 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்படும். 25 ஆண்டுகளுக்கு மேல் மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழும் 2000 ரூபாய் காசுகளையும் வழங்கப்படும். திருப்பூரில் கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு திருவிழா நடத்தப்பட்டு 8333 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது அதேபோன்று நடப்பாண்டிலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். திருப்பூர் பகுதியில் சிறுகுறு தொழில் முனைவோர் தங்கள் ஆயத்த ஆடை தயாரிப்புகளை விற்பனை செய்ய வசதியாகவும், வாழ்வாதாரம் பெருக்கவும் மாநகராட்சியின் சார்பில் பனியன் சந்தை உருவாக்கப்படும். திருப்பூர் மாநகராட்சி  பகுதியில் உள்ள 60 வார்டுகளும் மேயர் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அடிப்படை வசதிகளை  பயன்படுத்தும் விதமாக மக்களுடன் மேயர் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகரில் 10 இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக தனியார் பங்களிப்புடன் கழிவறைகள் மற்றும் சிறுகடைகளுடன் கூடிய பயனியர் நிழல்குடை  அமைக்கப்படும். திருப்பூர் மாநகராட்சி உடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து முக்கியமான பொது இடங்களில் தானியங்கி விற்பனை இயந்திரத்தின் மூலமாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய மஞ்சள் பைகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது . திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலையில் மற்றும் சந்திப்புகளில் உள்ள மாநகராட்சி நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டு சிறிய அழகிய பூங்காக்கள் நீர் ஊற்றுகள் வண்ண விளக்குகள் அமைக்கப்படும். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்கூடங்களுக்கு QR Code  நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கும் பணி நிறைவடைந்து வரி விதிக்கப்படும் போதும் QR Code  நிறுவ வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை அன்று ஒவ்வொரு வாரத்திலும் மாமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து மக்களின் பங்கேற்போடு வீதியை சுத்தம் செய்தல், சுண்ணாம்பு அடித்தல், மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்நாளை சுகாதார திருநாளாக கொண்டாடப்படும்” என கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News