ஜல்லிக்கட்டுக்கு வந்த காளை மாயம்
திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி ஜல்லிக்கட்டில் களம் இறங்கிய மதுரை (பரவை) காளை காணவில்லை. என அறிவிப்பு விடுத்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-10 12:30 GMT
ஜல்லிக்கட்டுக்கு வந்த காளை மாயம்
திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டிக்கு வந்த ஜல்லிக்கட்டு காளை மாயமானது குறித்து உரிமையாளர்கள் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி ஜல்லிக்கட்டில் களம் இறங்கிய மதுரை (பரவை) காளை காணவில்லை. காளை யாரிடமும் சிக்காமல் தாவி குதித்து வெளியே வந்தது. காளையர்களை துவசம் செய்த காளை சீறி பாய்ந்து ஓடியது. களம் கண்ட பிறகு வெளியேறிய காளையை காண முடியவில்லை. எங்கு சென்றது என்று தெரியவில்லை.காளையை கண்டவர்கள் 9994255303 எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும். இவ்வாறு மாட்டின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.