குமரியில் தேர்தல் வேட்புமனுக்கள்  இன்று முதல் விநியோகம்

கன்னியாகுமரி மாவட்டம்,விளவங்கோடு சட்டமன்ற இடைதேர்தலுக்கான வேட்பு மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-19 02:29 GMT

இடைத்தேர்தல் வேட்பு மனு 

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் , விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வருகிற 27ஆம் தேதி ஆகும்.

இந்த நிலையில் வேட்பாளர்கள் தாக்குதல் செய்வதற்கான வேட்பு மனுக்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இன்று செவ்வாய்க்கிழமை வந்த சேரும் என்ன அதிகாரிகள் தெரிவித்தனர். இதை அடுத்து இன்று மதியத்திற்கு பிறகு வேட்பு மனு வினியோகம் நடக்க இருக்கிறது. நாளை புதன்கிழமை முதல் தாக்கல் செய்யலாம்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ஸ்ரீதர் இடமும், விளவங்கோடு சட்ட சபை தொகுதி இடை தேர்தலுக்கான வேட்பாளர் மனுக்களை குழித்துறையில் உள்ள தாலுகா அலுவலகத்திலும் தாக்கல் செய்யலாம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News