வடை சுட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர் !
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை பகுதியில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
By : King 24x7 Angel
Update: 2024-04-01 06:56 GMT
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை பகுதியில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் பணியாரம் மற்றும் வடை சுட்டு நூதன முறையில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொது மக்களின் கஷ்டங்களை மக்களோடு மக்களாக இருக்கின்ற எங்களுக்குத் தான் தெரியும். 30 ஆண்டு காலமாக இந்த தொகுதி மக்களை சிலரை ஏமாற்றுகின்றனர். மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகின்ற ஒரே கட்சி பாமக. நமது நாட்டின் பிரதமர் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார். உலகிற்கே வழிகாட்டியாக இந்தியா விளங்கி வருகிறது. இதற்கு காரணம் மோடி தான் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.