கோயில் முன்பு இருந்த கடைகளை அகற்றிய அறநிலைத்துறையினர்!
கோயில் முன்பு இருந்த கடைகளை அறநிலைத்துறையினர்! அகற்றினர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-14 14:55 GMT
கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள்
புதுக்கோட்டை, நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் முன்பு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து நேற்று அறநிலையத் துறை உதவி ஆணையர் அனிதா தலைமையில் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 33 தற்காலிக கடைகள் அகற்றப்பட்டன.