வாசுதேவநல்லூர் அருகே அகழாய்வு பணியை தொடங்கி வைத்த முதல்வர்

வாசுதேவநல்லூர் அருகே அகழாய்வு பணியை முதல்வர் தொடங்கி வைத்தார்.

Update: 2024-06-18 13:30 GMT

முதல்வர்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அடுத்த திருமலாபுரம் கிராமத்தில், குலசேகரப்பேரி கண்மாய்க்கு மேற்கே தொல்லியல் மேடு அமைந்துள்ளது. இதில் சமீபத்தில் திருமலாபுரம் மற்றும் உள்ளார் பகுதியில் இருந்து மேற்கு பகுதியில் 5 கிலோமீட்டர் தொலைவில் தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டன. 

  இதையடுத்து இங்கு அகழாய்வு பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11:30 மணியளவில் காணொளி கட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News