தூத்துக்குடி கடற்பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து

தூத்துக்குடி கடற்பகுதியில் கேரள விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுகிறார்களா என்று கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-04-28 16:13 GMT

ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இந்நிலையில், கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகுகள் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் பெரியதாழை வரையில் கடலோர காவல் படையினர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், தூத்துக்குடி மீன்வளத்துறை ஆய்வாளர் பொன் சரவண கண்ணன் தலைமையில் மீன்வளத்துறை அலுவலர்கள் சேவியர், தேசிங்கு, கடலோர சட்ட அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் உமையொருபாகம், மற்றும் காவலர்கள் செல்லையா,

பாண்டியன், தோமஸ் சேவியர் ஆகியோர் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளுடன் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த Aadhesh என்ற கப்பலில் கூட்டாக ரோந்து மேற்கொண்டனர்.

Tags:    

Similar News