திருமயம் அருகே தேங்காய் பறித்தவர் தவறி விழுந்து பலி
திருமயம் அருகே தேங்காய் பறித்தவர் தவறி விழுந்து பலியானர்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-07 15:17 GMT
திருமயம் அருகே உள்ள வி.கோட்டையூரை சேர்ந்தவர் கருப் பையா(40). நேற்று மதுபானம் அருந்திய நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித் தார். பின்னர் தென்னமட்டையை பிடித் துக்கொண்டு கீழே இறங்கும் போது மட்டை முறிந்ததால் கருப்பையா கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்திவரு கின்றனர்.