துரிஞ்சாபுரம் அருகே விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய ஆட்சியர்

துரிஞ்சாபுரம் அருகே விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆட்சியர் ஆறுதல் கூறினார்.

Update: 2024-04-01 14:23 GMT
ஆட்சியர் அஞ்சலி

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் மாதுலம்பாடி கணேசபுரத்தை சேர்ந்த நாராயணன் மகன் ஹரிஹரன் என்பவர் கடந்த 31 ம் தேதி விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தார் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்தனர்.

இதனையடுத்து உடல் உறுப்பு தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசின் சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (01.04.2024) அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News