ரோந்து குழு வாகனத்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்த ஆட்சியர்
திருச்சி மக்களவைத் தொகுதி தோ்தலுக்கு அனைத்து நிலைகளிலும் முழுமையாக தயாா் செய்யப்பட்டிருப்பதாக தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பிரதீப்குமாா் தகவல்.
Update: 2024-03-17 10:19 GMT
மக்களவைத் தோ்தலையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை தோ்தல் பறக்கும் படை வாகனத்தை மாவட்ட ஆட்சியா் பிரதீப் குமாா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். மேலும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆட்சியா் விளக்கம் அளித்தாா். பொதுமக்கள் தோ்தல் தொடா்பான தங்களது குறைகள், புகாா்களை கட்டுப்பாட்டு அறையை 1800 599 5669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் 63840 01585 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் தெரிவிக்கலாம். சி-விஜில் எனும் செயலி மூலமும் புகாா் தெரிவிக்கலாம். அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என அனைவரும் தோ்தல் தொடா்பான அனைத்து அனுமதிகளையும் சுவேதா எனும் இணையவழியில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்வுகளில், தோ்தல் பிரிவு அலுவலா்கள் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.