கைவிடப்பட்ட குழந்தை - தனியார் அமைப்பிடம் ஒப்படைத்த ஆட்சியர்
குழந்தையை விட்டுவிட்டு தாய் தலைமைறைவானார்;
குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 23.08.2023 அன்று இரவு 10.30 மணியளவில் ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தையை தாயார் மருத்துவமனையில் விட்டுவிட்டு தலைமறைவு ஆகிவிட்டார் என்ற தகவல் மருத்துவமனையின் வாயிலாக மாவட்ட சமூக நல அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட சமூகநல அலுவலர், நன்னடத்தை அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஆகியோர் குறிப்பிட்ட அந்த மருத்துவமனைக்கு சென்று தனியார் மருத்துவமனையிலிருந்து குழந்தையை மீட்டு, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஒப்படைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து அக்குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, குழந்தை சிராக உள்ளது என்பதை உறுதி செய்து அரசு விதிகளுக்கு உட்பட்டு தத்துகொடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், முன்னிலையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தொண்டு நிறுவன அமைப்பிடம் பாதுகாப்பாக ஒப்படைந்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் (பொ) பியூலா, நன்னடத்தை அலுவலர் சேவியர், ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஷெரின் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.