மகளிர் குழுவினருக்கு காசோலை வழங்கிய ஆட்சியர்
கிரிவலப்பாதையில் சுகாதார கழிப்பிடங்களை பராமரிக்கும் மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.
Update: 2024-05-07 17:22 GMT
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள சுகாதார கழிப்பிடங்களை பராமரிக்கும் மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (07.05.2024) வழங்கினார். அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.