மாணவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்ட கலெக்டர்
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்த்தை பார்வையிட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், மாணவர்களுடன் உட்கார்ந்து உணவு சாப்பிட்டார்.;
Update: 2024-02-22 07:04 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்த்தை பார்வையிட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், மாணவர்களுடன் உட்கார்ந்து உணவு சாப்பிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவின் தரம் மற்றும் கால் அட்டவணை குறித்து பணியாளரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.