கணவர் விருது வாங்கியதை அலைபேசியில் பார்த்து ரசித்த ஆட்சியரின் மனைவி !
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வாங்கியதை ஆட்சியரின் மனைவியும் ஆன ஆசா அஜித் மகிழ்ச்சியுடன் ரசித்தனர்.
Update: 2024-03-09 05:12 GMT
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக பல்வேறு அரசு துறைகளின் திட்டங்களை துவக்கி வைத்தார். இதில் சமூக நலத்துறை சார்பான திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியதற்காக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு பத்திரத்தை வழங்கினார். இதனை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்ற நகராட்சி அலுவலக கூடுதல் கட்டட சிறப்பு விழாவிற்காக மானாமதுரை நகராட்சி அலுவலக வளாகத்தில் காணொளி காட்சியை பார்த்துக் கொண்டிருந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் மனைவியும் ஆன ஆசா அஜித் மகிழ்ச்சியுடன் பார்த்து தனது கணவர் விருது வாங்கியதை தனது அலைபேசியில் பதிவு செய்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து ரசித்தனர்.