செங்கம் பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணிக்கு இடையூறு

செங்கம் பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-02-06 10:03 GMT

ரவுண்டானா அமைக்கும் பணி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் போளூர் குப்பநத்தம் சந்திப்பு சாலையில் 1 கோடி மதிப்பீட்டில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் தொடங்கியது. இந்தநிலையில் ரவுண்டானா அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள மின் மாற்றி, மின் கம்பம் இடமாற்ற மின்சார வாரிய அலட்சியம் காட்டுவதால் பணிகள் கடந்த ஒரு மாத காலமாக முடங்கியது.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மின் மாற்றி, மின் கம்பங்களை இடமாற்றம் செய்து 1 கோடி ரூபாயில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News