உயிரிழந்த நிலையில் மீனவர் சடலம்
வாஞ்சூர் சோதனை சாவடி பகுதியில் உயிரிழந்த நிலையில் மீனவர் சடலமாக கிடந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.;
By : King 24x7 Angel
Update: 2024-02-08 05:17 GMT
உயிரிழந்த நிலையில் மீனவர் சடலம்
நாகை மாவட்டம் நாகூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சாமான்தான்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் சக்திவேல் வயது 72 மீனவர் மீன்பிடித் தொழில் செய்து வரும் சக்திவேல் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் இந்த நிலையில் பிப்ரவரி 6 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு வாஞ்சூர் சென்று வருவதாக தனது மனைவி பவுனமாளிடம் கூறிவிட்டு சென்ற சக்திவேல் வாஞ்சூர் சோதனை சாவடி பகுதியில் உள்ள வணிகவரி அலுவலக வாசலில் மதுபோதையில் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சக்திவேல் மனைவி பவுனம்மாள் நாகூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நாகூர் போலீஸசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.