வாகன ஓட்டுனருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

20 வருடங்கள் விபத்தில்லாமல் இயக்கிய அரசு ஜீப் ஓட்டுநர் ராமச்சந்திரனுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2023-10-31 11:49 GMT

ஓட்டுநரை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஜீப் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ஆர்.ராமச்சந்திரன். இவர், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஜீப் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், 20 வருடங்கள் விபத்தில்லாமல் ஜீப் ஓட்டியதற்காக அவருக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, 4 கிராம் தங்க நாணயங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

Tags:    

Similar News