மேலமாத்தூரில் வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

மேலமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-03-24 10:04 GMT

வாக்குச்சாவடி மையம் ஆய்வு

 பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம், மார்ச் 23ஆம் தேதி மாலை - 3 மணி அளவில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையத்தினை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம், வாக்களிக்க வருபவர்கள் எவ்வித சிரமமுமின்றி வந்து செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,

வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், வாக்குச்சாவடி மையத்தில் போதிய மின் விளக்குகள், மின்விசிறிகள் அமைத்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த வாக்காளர்கள் எளிதில் சென்று வருவதற்கு தேவையான சாய்தளம், சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கரராமன், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா, குன்னம் வட்டாட்சியர்கள் கோவிந்தம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News