வாக்காளர் தகவல் சீட்டு வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்

நாமக்கல் மாவட்டம், கட்டணச்சாம்பட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச. உமா வாக்காளர்கள் இல்லங்களுக்கு சென்று வாக்காளர் தகவல் சீட்டு வழங்கி பணியினை தொடங்கி வைத்தார்

Update: 2024-04-01 11:26 GMT

வாக்காளர் அடையாள சீட்டு

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர்களுக்கு வீடுகளுக்கே சென்று வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip) வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், கட்டனாச்சம்பட்டி ஊராட்சியில் இன்று (01.04.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, வாக்காளர்களுக்கு இல்லங்களுக்கு சென்று வாக்காளர் தகவல் சீட்டு வழங்கி பணியினை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip) சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 1,628 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO’s) மூலம் சம்மந்தப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படவுள்ளது.

இப்பணிகள் 13.04.2024-க்குள் முடிக்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் தகவல் சீட்டுகள் வாக்குசாவடி நிலை அலுவலரின் கையொப்பத்துடன் வாக்காளர் அல்லது அவரது குடும்பத்திலுள்ள 18 வயது பூர்த்தியான உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். எனவே வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமிருந்து வாக்காளர் தகவல் சீட்டினை பெற்றுக் கொண்டு தேர்தல் நாளான 'ஏப்ரல் 19" அன்று தவறாமல் பொதுமக்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தால் கூறப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தெரிவித்தார்.

தொடர்ந்து,இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News