கோவையில் ஆட்டு கறி பிரியாணி வழங்கி வெற்றியை கொண்டாடிய திமுகவினர்

கோவையில் ஆட்டு கறி பிரியாணி வழங்கி வெற்றியை கொண்டாடிய திமுகவினர்.

Update: 2024-06-04 11:11 GMT

மட்டன் பிரியாணி வழங்கிய திமுகவினர்

கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை,திமுக சார்பில் கணபதி ராஜ்குமார்,அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். 

  பீளமேடு பகுதியில் தனியார் அரங்கில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தின்போது கோவை திமுக பொறுப்பு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசுகையில் "அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என கிண்டல் செய்ததுடன் திமுக வெற்றி பெற்றால் ஆடு பிரியாணி வழங்கப்படும்," என தெரிவித்திருந்தார்.

இது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. மேலும் அமைச்சர் பிரச்சாரம் செய்ய சென்ற இடங்களில் ஆடு பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட 50,000 வாக்குகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளார்.

இதனைத் தொடர்ந்து கோவை கோட்டைமேடு திமுக மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் விளையாட்டு மேம்பாட்டு அணி தொண்டர்கள் சார்பில் அப்பகுதி மக்களுக்கும் ஆடு பிரியாணி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News