போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடக்கம்

மக்களவை தேர்தலையொட்டி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-19 06:06 GMT

 மாநகர காவல் ஆணையர் அலுவலகம் 

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் தொடர்ந்து 3 வருடம் பணியாற்றி வரும் உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் போலீசார் வரை பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் தொடர்ந்து 3 வருடமாக பணியாற்றி வரும் போலீசார் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில், மாநகர போலீஸ் அலுவலகத்தில் உதவி கமிஷனர் பாபு தலைமையில் தேர்தல் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. அதே போன்று மாவட்ட போலீஸ் அலுவலகத்திலும் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News