ஊடகச் சான்றளிப்பு மையத்தை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்

ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் மற்றும் ஒற்றை சாளர முறை மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பார்வையிட்டார்.

Update: 2024-03-21 11:21 GMT

ஆய்வு செய்த ஆட்சியர் 

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் – 2024 நடைபெறவுள்ளதையொட்டி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் மற்றும் ஒற்றை சாளர முறை மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, பார்வையிட்டார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படுவது மற்றும் ஒளிபரப்பப்படுவதை கண்காணிப்பதற்காகவும்,

விளம்பரங்களுக்காக சான்றளிப்பதற்காகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு (MEDIA CERTIFICATION AND MONITORING COMITTEE), ஊடக மையம் (MEDIA CENTER) செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் உள்ளூர் கேபிள் சேனல்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்ய ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் சான்றொப்பம் பெற்று முன் அனுமதி பெற வேண்டும். விளம்பரத்திற்கான செலவினத்தொகை கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியின் தேர்தல் செலவின கணக்கில் சேர்க்கப்படும்.

மேலும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள சூழ்நிலையில் கட்சி கூட்டம், பிரச்சாரம், கோயில் திருவிழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரின் அனுமதி பெற வேண்டியது அவசியம். அனுமதி பெறுவதற்கு நிகழ்ச்சி நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒற்றைச் சாளர முறை மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News