யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.12) நடைபெறுகிறது.
Update: 2024-04-12 11:20 GMT
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா நாளை காலை சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக வெள்ளிக்கிழமை, பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனாா் கோயிலில், யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்.21-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.