விருதுநகர் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர்

விருதுநகர் அருகே தானமாக வழங்கிய நிலத்தை திரும்ப வழங்க கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-09 07:51 GMT
தானமாக வழங்கிய நிலத்தை திரும்ப வழங்க கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர்

விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு கிராமத்தைச் சார்ந்தவர் வாசுதேவன் இவரது மனைவி மல்லிகா இவர்களுக்கு விஜய ராணி என்ற மகளும் உள்ளார். வாசுதேவன் மெட்டுக்குண்டு கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தை கடந்த 1997 ஆண்டு அரசுக்கு தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது.

இதற்காக வாசுதேவனுக்கு பிரதிபலனும் பெறவில்லை எனவும் நிலம் பெறப்பட்ட 26 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் நலனுக்காக அந்த நிலத்தை பயன்படுத்தவில்லை எனவும், தானமாக வழங்கிய நிலத்தில் இருந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாகவும்,

இந்த நிலையில் மக்களுக்கு பயன்படும் என தான் வழங்கிய நிலத்தை மக்களுக்கு பயன்படுத்தாமல் சமூக விரோத செயலுக்கு சிலர் பயன்படுத்தி வருவதாகவும் அவருடைய மகள் விஜய ராணி வறுமையில் கணவர் இல்லாமல் வாழ்ந்து வரும் நிலையில் தனது மகளுக்கு அந்த நிலத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வாசுதேவன் தனது குடும்பத்தினருடன் விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம் வருவாய் வட்டாட்சியர் ராஜசேகரன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் அங்கிருந்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Tags:    

Similar News