வீட்டுக்குள் புகுந்த தேனீக்களால் குடும்பத்தினர் அச்சம் !
வீட்டின் முன்பாக பெரிய அளவில் தேனீக்கள் கூடு கட்டியது. இதனால், பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்று வர முடியாமல் அச்சமடைந்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-11 05:52 GMT
தேனீ
பழனி பெரிய பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் பீர் முகமது என்பவரது வீட்டில் நேற்று மாலை தேனீக்கள் புகுந்தது. வீட்டின் முன்பாக பெரிய அளவில் தேனீக்கள் கூடு கட்டியது. இதனால், பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்று வர முடியாமல் அச்சமடைந்தனர். தகவல் அறிந்து வந்த தேனீ ஆர்வலர் இஷாக் தலைமையிலான குழுவினர் தேனீக்களை பத்திரமாக பிடித்துச் சென்று மலைப்பகுதியில் விட்டனர்.