மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 3,454 கன அடியாகச் சரிந்தது.;
Update: 2023-10-30 04:30 GMT
மேட்டூர் அணை
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. நீர்வரத்து மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 4,044 கன அடியாக இருந்த நிலையில் இன்று 3,454 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51.45 அடியில் இருந்து 51.83 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 18.98 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை அளவு 29.40 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.