கட்டி முடிக்கப்பட்ட ஐந்து மாதங்களில் உடைந்த தரைப்பாலம்
பசும்பொன் நகர் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து மாதங்களில் உடைந்த தரைப்பாலம்
Update: 2023-11-29 07:26 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டதுஅத்திகுளம் தெய்வேந்தரி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த பகுதியில் பேவர் பிளாக் கல் மற்றும் தரைப்பாலம் அமைக்கப்பட்ட பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதத்தில் முடிக்கப்பட்டது. 12 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் சாலை மற்றும் பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தரைப்பாலமானது உடைந்து அதன் கம்பிகள் வெளியில் தெரியும் நிலை ஏற்பட்டு அந்தப் பகுதியில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் கட்டப்பட்டு ஐந்து மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் கரைப்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உடனடியாக பாலத்தை சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.